திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையில் பக்கச்சார்பற்ற நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா அழைப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையின் அடுத்த கட்ட நகர்வு என்ன..! அமெரிக்கா அறிவுரை

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய, உள்ளடக்கிய, பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் சுதந்திரமான நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 54வது அமர்வில் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுக்கான அமெரிக்கத் தூதுவர் கெல்லி பில்லிங்ஸ்லி, உரையாற்றுகையில், மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தொடர்ச்சியான கவனத்தை அமெரிக்கா பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொருளாதார மீட்சி
“இலங்கையின் பொருளாதார மீட்சியை வழிநடத்தும் போது, ஊழலுக்கு எதிரான சட்டம் உட்பட இலங்கையின் பலப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் விடுவித்ததையும் அமெரிக்கா வரவேற்கிறது.

அத்துடன், காணி மீளப் பெறுவதில் ஆரம்ப முன்னேற்றம் பாராட்டத்தக்கது.

மேலும், சிறுபான்மை சமூகங்களின் மதத் தலங்களில் ஏற்படும் பதற்றங்கள், சிவில் சமூகத்தின் மீதான அரசாங்க அழுத்தம் மற்றும் 2018 முதல் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமை குறித்து அமெரிக்கா தமது அதிருப்தியை வெளியிடுகிறது.

இதேவேளை நிலைமாறுகால நீதி நிறுவனங்கள் நம்பகத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் இயங்குவதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்துகிறோம்” என்றார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram