சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

மீண்டும் இன வன்முறையை தூண்டும் சூத்திரதாரிகள்: பிரதமர் உறுதிமொழி

பகிர: Facebook WhatsApp X Telegram
மீண்டும் இன வன்முறையை தூண்டும் சூத்திரதாரிகள்: பிரதமர் உறுதிமொழி

திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனியின் போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது குண்டர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

உயிர் அச்சுறுத்தல்
அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்குவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. கொட்டன்கள் கொண்டு தாக்கி நாடாளுமன்ற உறுப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குழுவினர் கைது செய்யப்படுவார்கள்.

இந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

நாட்டில் இன வன்முறையை மீண்டும் தூண்டச் சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது.” என்றார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram