ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
ஆன்மீகம்

நீங்கள் பிறந்த திகதி என்ன? உங்களின் அதிர்ஷ்ட துணை இவர்கள்தான்

பகிர: Facebook WhatsApp X Telegram
நீங்கள் பிறந்த திகதி என்ன? உங்களின் அதிர்ஷ்ட துணை இவர்கள்தான்

ஒருவரின் பிறந்த திகதியை வைத்து அவர்களுக்கு எந்த திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் அல்லது இருக்காது என்பதற்கான பலனை ஜோதிடம் கூறுகிறது.

1, 10, 19, 28 ம் திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 3, 4, 5, 6, 8 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் 1-ம் எண் உள்ள பெண்கள் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு கௌரவப் பிரச்சனைகள், குடும்ப அன்யோன்யம் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.

எனவே 1, 10, 19, 28 திகதிகளும், 6, 15, 24 திகதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் திகதிகளிலும் திருமணம் செய்தால் வாழ்க்கை செழிக்கும்.

2, 11, 20, 29 ம் திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் மிகவும் ஏற்றவர்கள். இருப்பினும் 7-ம் திகதியில் பிறந்த பெண் மிகவும் சிறந்த பெண்ணாக அமையும்.

இவர்கள் 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. 1-ம் எண் பிறந்த பெண், இவர்களை அடக்கி ஆளும் திறன் கொண்டிருப்பார்கள். நல்ல வழித் துணையாகவும் அமைவாள்.

3, 12, 21, 30 ம் திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை இனிமையாக அமையும்.

மேலும் இவர்கள் 2-ம் எண்ணில் பிறந்தவர்களையும் திருமணம் செய்துக் கொள்ளலாம், இவர்கள் உங்களை அனுசரித்துப் போவார்கள்.

4, 13, 22, 31 ம் திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 1, 8 மற்றும் 5, 6 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம் கொண்டால் திருமண வாழ்க்கை நல்லப்படியாக அமையும்.

மேலும் 4-ம் திகதியில் பிறந்த ஆண்கள், 6-ம் திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.

5, 14, 23 ம் திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கக்கு காதல் மீது அதிக மோகம் இருக்கும். தைரியமாக காதலில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் காதலால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள்.

ஆனால் இவர்கள் 1, 3, 6 பிறந்தவர்களையும் மற்றும் 2, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

6, 15, 24 ம் திகதியில் பிறந்தவர்கள்

6,15,24 ம் திகதியில் பிறந்தவர்கள் 6, 9 எண்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்வதால் நல்ல வாழ்க்கை அமையும்.

இவர்கள் 1, 3, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தவர்களை தவிர்த்து விடுவது நல்லது.

7, 16, 25 ம் திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.

அதிலும் குறிப்பாக 2, 1 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். ஆனால் 8-ம் திகதி பிறந்தவர்களை மணந்து கொள்ளக் கூடாது.

8, 17, 26 ம் திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் 1, 4 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்துக் கொள்ளலாம். ஆனால் 2, 7 மற்றும் 8-ம் எண்களில் பிறந்த பெண்களை மட்டும் திருமணம் செய்யக் கூடாது.

9, 18, 27 ம் திகதியில் பிறந்தவர்கள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் இவர்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால், இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

ஆனால் இவர்கள் 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 ஆக வரும் பெண்களையும் திருமணம் செய்யவே கூடாது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்