திங்கள், நவம்பர் 9, 2026
Breaking
Srilanka

விகாரை குகைக்குள் எலும்புக்கூடு! பிக்குவின் ஆடையும் மீட்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
விகாரை குகைக்குள் எலும்புக்கூடு! பிக்குவின் ஆடையும் மீட்பு

இரத்தினபுரி, கஹவத்த பகுதியில் உள்ள கல்லென விகாரையின் குகைக்குள் உள்ள வீட்டில் இருந்து எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூட்டின் மீது பிக்கு அணியும் ஆடையொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த இரத்தினபுரி சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு எலும்புக்கூடு இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸாருடன் இணைந்து கஹவத்தப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்