திங்கள், நவம்பர் 9, 2026
Breaking
சமையல் குறிப்பு

பிட்ஸா தோசை செய்வது எப்படி?

பகிர: Facebook WhatsApp X Telegram
பிட்ஸா தோசை செய்வது எப்படி?

தேவையானவை:

தோசை மா – ஒரு கப்
முட்டை – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
மிளகு, சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 2 கொத்து
பச்சை மிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – 2 சிட்டிகை
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை –
பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இரண்டு கரண்டி மாவை ஊற்றி சற்று தடிமனாக ஊத்தாப்பம் போல் ஊற்றவும். பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி மேலே மிளகு, சீரகத் தூள், உப்பு, தூவவும். அதன் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி வேக விடவும். சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான பிட்ஸா தோசை தயார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்