புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka Politics

அரசியல் கைதிகள் விவகாரம்! நாமல் வெளியிட்ட தகவல்

பகிர: Facebook WhatsApp X Telegram
இராணுவத்தினரை பயன்படுத்த மாட்டோம் – நாமல்

அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றில் அவர், “தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை நடத்த எமது தரப்பு தயாராக உள்ளது.

நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பாக, ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். ”

ஒரு சில தனிநபர்களின் சுய நல தேவைகளுக்காக, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் அடையாளமாக திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை, சிலரிடம் அடகு வைப்பது தமிழ் சமூகத்தை ஏமாளிகள் ஆக்கும் செயல்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்