முல்லைக் கடற்கரையில் புலிக்கொடி….!! பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்…!!

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேசியக் கொடி புத்தம்புதியதாய் உள்ளதுடன் கடலிலிருந்து மிதந்துவந்து கரையொதுங்கிய நிலையில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதை பார்த்த மீனவர்கள் மற்றும் மக்கள் அதை சூழநின்று பார்த்துவிட்டு சென்றுவிட்டனர்.

இதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு வந்த பொலிஸார் அதனை மீட்டுச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை இதுதொடர்பான விசாரணைகளில் தாம் ஈடுபடுள்ளதாக கூறும் முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் யாரையும் இன்னும் கைதுசெய்யவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles