கொழும்பில் சுட்டு கொல்லப்பட்ட தமிழர்கள்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

வத்தளை- ஹேக்கித்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தமிழர் என தெரியவந்துள்ளது.

காரொன்றில் வத்தளையிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது மற்றொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால், இருவர் உயிரிழந்தனர்.

கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்களுள் 33 வயதுடைய நபர் ஸ்டீவன் ராஜேந்திரன் என அடையாளங் காணப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மற்றைய நபர் மதி ​என்ற பெயரால் அழைக்கபடுபவரென்றும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இருவருடனும் பயணித்த ஸ்டீவன் ராரேந்திரனின் உறவினர் பெண் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மேலும் கொட்டாஞ்சேனை- செல்லையா தோட்டத்தில் இடம்பெற்று வரும் ஹெரோய்ன் போதை வர்த்தகம் தொடர்பில் இரு குழுக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த முரண்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.