சனி, நவம்பர் 21, 2026
Breaking
Srilanka

புது வீட்டில் குடிபுகுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! யாழில் சம்பவம்

பகிர: Facebook WhatsApp X Telegram
காற்சட்டைப் பையில் தங்க நகைகள் கடத்திய – பெண் கைது!!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில்ல தாலிக்கொடி உட்பட 45 பவுண் தங்க நகைகள் மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன கொள்ளையாடி சென்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

புதிதாக கட்டிய வீடொன்றில் குடிபுகுந்த மறுதினமே வீட்டிலிருந்து இவ்வாறு கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றதுத.

நேற்று முன்தினம் யாழ்.ஏழாலை ஏழு கோயில் வீதியிலுள்ள ஆசிரியையொருவரின் வீட்டிலேயே குறித்த துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கைப்பைக்குள் நகைகள் மற்றும் பணத்தைப் பத்திரமாக வைத்துவிட்டு ஆசிரியர் உறக்கத்துக்குச் சென்றுள்ளார். மேற்படி வீட்டிலிருந்த ஏனையவர்களும் உறங்கி விட்டனர்.

இந்நிலையில் மறுநாள் அதிகாலை வேளையில் குறித்த ஆசிரியர் உறக்கத்தால் துயிலெழுந்து பார்த்த போது வீட்டு யன்னலூடாக அவரது கைப்பை மட்டும் தொங்கிக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து கைப்பையை எடுத்துப் பார்த்த ஆசிரியை அதற்குள்ளிருந்த பெறுமதியான தாலிக் கொடி, தங்கநகைகள், பணம் என்பன திருடப்பட்டிருப்பது கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வீட்டில் திருடர்கள் எவரும் நுழைந்தமைக்கான தடயங்கள் காணப்படாத நிலையில் வீட்டின் யன்னலூடாக குறித்த கைப்பை கொழுவி எடுக்கப்பட்டுத் திருடப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி கொள்ளைச் சம்பவம் குறித்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்