ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Cinema

இவ்வளவு பிரம்மாண்டமா? தளபதி63 ஓப்பனிங் பாடல் பற்றி வெளியான புதிய தகவல்

பகிர: Facebook WhatsApp X Telegram
இவ்வளவு பிரம்மாண்டமா? தளபதி63 ஓப்பனிங் பாடல் பற்றி வெளியான புதிய தகவல்

அட்லீ-விஜய் கூட்டணியில் தயாராகி வரும் தளபதி63 படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

சென்னையில் பரபரப்பாக நடந்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் சமீபத்தில் ஓப்பனிங் பாடலை படமாக்கியுள்ளனர்.

அதில் சுமார் 100 குழந்தை நடனம் ஆடுவது போல எடுத்துள்ளார்களாம். விஜய்க்கு குழந்தைகள் அதிகம் ரசிகர்களாக உள்ள நிலையில் அவர்களை கவர தான் இப்படி ஒரு பாடல் எடுக்கபடுகிறது என கூறப்படுகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் தளபதி 63ல் யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்