திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

கனவுகளுடன் மண வாழ்க்கையை தொடங்கிய இளம்தம்பதி: திருமணமான 4 நாட்களில் நடந்த சோகம்

பகிர: Facebook WhatsApp X Telegram
புதுமண தம்பதியிருக்கு திருமணத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சி!

இந்தியாவில் திருமணமான 4 நாட்களில் புதுமண ஜோடி சாலை விபத்தில் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மண்டியாவை சேர்ந்தவர் தர்ஷன் (24). இவரும் சஹானா (19) என்ற பெண்ணும் சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருவரும் வீட்டை விட்டு ஓடிபோனார்கள்.

இருவரையும் காணவில்லை என அவர்களின் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்த நிலையில் நேற்று காவல் நிலையத்துக்கு தர்ஷனும், சஹானாவும் வந்தனர்.

தங்களுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துவிட்டதாக கூறி ஆதாரத்தை காட்டினார்கள்.

இதையடுத்து அவர்களை பொலிசார் விட்டுவிட்டனர்.

இந்நிலையில் நெடுஞ்சாலையில் தர்ஷனும், சஹானாவும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது லொறியை முந்த நினைத்து தர்ஷன் வண்டியை வேகமாக ஓட்டிய போது எதிரில் வந்த பேருந்தில் பைக் வேகமாக மோதியது.

இதில் இருவரும் தூக்கிவீசப்பட்ட நிலையில் சஹானா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தர்ஷன் அங்கு உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்