புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

முல்லைத்தீவில் முச்சக்கர வண்டியை சுற்றிவளைத்த பொலிஸார்: சிக்கிய புலிகளின் மர்ம பொருள்கள்!

பகிர: Facebook WhatsApp X Telegram
முல்லைத்தீவில் முச்சக்கர வண்டியை சுற்றிவளைத்த பொலிஸார்: சிக்கிய புலிகளின் மர்ம பொருள்கள்!

முல்லைத்தீவு, ஒட்டு சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு, புலிக்கொடி, புலி சீருடை போன்றவை பொலிஸார் மீட்டுள்ளனதாக தெரிவித்துள்ளனர்..

மேலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக் கணக்கில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீண்ட விசாரணைகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இந்த பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வெடிபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான இவர்கள் தற்போது அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்