அபிநந்தனை அடுத்து தல அஜீத்தின் மகன்.. இணையத்தை கலக்கி வரும் புகைப்படம்..!

அஜித் மகன் ஆத்விக் குமார் விமானி உடையணிந்து பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் பிங்க் பட தமிழ் ரீமேக்கில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப் படம் அஜித்தின் பிறந்த நாளான மே-1ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படப்பிடிப்புக்கு மத்தியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக் குமாரின் பிறந்தநாளை சென்னையில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர விடுதியில் கொண்டாடினார்.

இந்த விழாவில் அஜித், ஷாலினி தம்பதியின் நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். அப்போது ஆத்விக் குமார் விமானி உடையணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விமானி என்றால் கடந்த சில தினங்களாக இந்திய விமானப்படையில் உள்ள விங் கமாண்டர் அபிநந்தன் வைரலாகி வந்தார். இந்நிலையில், அஜித் மகன் ஆத்விக்கின் விமானி ஆடை வைரலாகி உள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like