அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விபரம் வெளியாகியுள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.2357 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 173.3888 ரூபாயாக பதிவாகியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

கடந்த மாதங்களில் 184 ரூபாவை கடந்த நிலையில் இலங்கை ரூபாயின் பெறுமதி காணப்பட்டுள்ளது.

தற்போது அது வலுவான நிலையில் உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.