யாழில் மறைந்திருந்த அமெரிக்க இராணுவ உபகரணம்: பள்ளிவாசல் தலைவர் கைது!

யாழ்.மண்கும்பான் பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் இன்று நடத்திய சோதனையில், இராணுவ பயன்பாட்டு பொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இரகசிய தகவலையடுத்து இன்று காலையில் இராணுவம், விசேட அதிரடிப்படை, பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். சோதனையின் போது இராணுவத்தினர் பாவிக்கும் குண்டு துளைக்காத கவசம், அமெரிக்க கொமாண்டோ படையினர் பயன்படுத்தும் நீர்கலன் பை, ரி 56 தோட்டாக்கள் 2 மற்றும் பட்டாசுகள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து மண்கும்பான் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு, விசாரணையின் பின் கைதானார்.

தமிழ் அரசு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் ஊடகச் செயலாளரின் தந்தையே கைதானார். தமிழ் அரசுக்கட்சியின் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஒருவரின் உதவியாளராகவும் அவர் பணியாற்றியிருந்தார். மேலும், தமிழ் அரசு கட்சியிலும் அங்கம் வகித்து வருகிறார்.