புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

கொக்குவிலில் நள்ளிரவில் அரங்கேறிய அட்டூளியம்! உதவி கோரி அலறிய மக்கள்!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்! வீட்டிலிருந்த சொத்துக்கள் சேதம்

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது என்று பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாக உள்ள மூன்று வீடுகளில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது.

வன்முறைக் கும்பல், வீடுகளின் படலை, யன்னல்கள் உட்பட பெறுமதியான தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்