சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

லொஸ்லியாவின் உண்மை முகம் என்ன? நேர்காணலில் உண்மைகளை அம்பலப்படுத்திய சாக்க்ஷி!

பகிர: Facebook WhatsApp X Telegram
லொஸ்லியாவின் உண்மை முகம் என்ன? நேர்காணலில் உண்மைகளை அம்பலப்படுத்திய சாக்க்ஷி!

என் கண் முன்னாலேயே கவீனும், லொஸ்லியாவும் நிறைய விடயம் செய்தார்கள். இறுதி வரை அவர்கள் இருவருக்கும் உள்ள உறவை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று பிக் பாஸ் புகழ் சாக்க்ஷி கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாக்க்ஷி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அதில், எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

லொஸ்லியாவிடம் கவின் குறித்து கேட்ட போது நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று தான் கூறினார்கள்.

நான் கவினிடம் கேட்டால், லொஸ்லியாவிடம் நண்பனாக தான் பழகுகிறேன், நீ தான் மச்சா எனக்கு முக்கியம் என்று கூறினார்.

ஆனால், என் கண் முன்னாடியே அவர்கள் இரண்டு பேரும் நிறைய விடயம் செய்தார்கள்.

ஆனால், கடைசி வரை அவர்கள் இருவருக்கும் உள்ள உறவை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

மேலும், லாஸ்லியா குறித்து பேசிய சாக்க்ஷி, அவருடைய உண்மையான முகம் எதுவென்று என்னால் இதுவரை கணிக்க முடியவில்லை.

வனிதா சமீபத்தில் சொன்னது போல அவருக்கு 10 முகம் இருக்கிறது. எந்த முகம் உண்மையான முகம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்