புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

கோத்தபாயவை மாயமாக்க கூடிய ஐ.தே.க வேட்பாளர் பெயர் வெளியானது

பகிர: Facebook WhatsApp X Telegram
கோட்டாவின் ஜனாதிபதியாகும் ஆசைக்கு அமெரிக்கா வைத்தது ஆப்பு?!

பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா என்பவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு பெரும் பலமாகும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரின் ஊடாகவே ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ளப் போவதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இன் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியுமான ஒரேயொரு வேட்பாளர் சபாநாயகர் தேசபந்து கரு ஜெயசூர்யவே என்று பேராதனை பல்கலைக்கழகம் செய்த மக்கள் கருத்துக் கணிப்பிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் கணிப்பீட்டில் கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் இணைக்கப்பட்டு இந்த கணிப்பு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய நாடு, இனம் மற்றும் மதம் ஆகிய உணர்வு கொண்ட மற்றும் அவை குறித்த நம்பிக்கை வைக்கக் கூடிய சிரேஷ்ட அனுபவம் கொண்ட ஒரே ஒருவர் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவே என்று கணிப்பீட்டில் தெரிவந்துள்ளது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்கினால் அதன் இலாபம் கோட்டாபய ராஜபக்ஷவை விடவும் ஜே.வி.பி யின் அனுர குமார திஸாநாயக்கவுக்கே சேரும் என்று அந்த ஆய்வில் கண்டுப்பிடிக்கபட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்