சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.. அடுத்தடுத்த இடங்களில் யார் தெரியுமா?..

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் அடித்து சொல்லும் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.. அடுத்தடுத்த இடங்களில் யார் தெரியுமா?..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த, உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டது, சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என சரியாக கணித்து கூறியது.

அகில இந்திய அளவிலான, ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள இவர், இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோதும்.. அதேசமயம் தோற்க நேரிடும் என்றும் கடந்த ஜனவரி -1ஆம் தேதியே தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.

ஆரம்பத்தில் இதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றாலும், பின் இந்த சம்பவம் உண்மையானதும் இவரிடம் ஜோதிடம் பார்க்க பலர் ஆர்வம் காட்டினர்.

பிக்பாஸ் வின்னர் இவர்கள் தானாம்
இந்நிலையில் இவர், தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணித்து கூறியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள பாலாஜி ஹாசன், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் தான் வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.

அப்படி பார்த்தால் இந்த நிகழ்ச்சியில், வெளிநாட்டில் இருந்து கலந்து கொண்டுள்ள ஆண் போட்டியாளர்கள், இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் மலேசியாவை சேர்ந்த, முகென் ராவ் ஆகியோர் தான்.

அதே போல் இரண்டாம் இடத்தை பிடிக்க போவது ஒரு பெண் போட்டியாளர் என கூறியுள்ளார். எனவே ஒரு வேலை லொஸ்லியாவா அல்லது ஷெரினா ஆகியோர் பைனல் வரை செல்லும் போட்டியாளர்கள் லிஸ்லிட்டில் இருப்பதால் இரண்டாவது இடத்தை இவர்கள் பிடிக்க வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சில், ஆரம்பிக்கப்பட்ட தேதி, நேரம், இடம் ஆகியவற்றை வைத்து இந்த ஜோதிடத்தை கணித்துள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பாலாஜி ஹாசன். இதை வைத்து பார்க்கும் பொழுது இறுதியில் பிக்பாஸ் சீசன் டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது இன்னும் 27 நாட்களில் தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்…

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்