புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

மட்டக்களப்பில் தமிழர் பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த முஸ்லிம்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
மட்டக்களப்பில் தமிழர் பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த முஸ்லிம்கள்

மட்டக்களப்பு – வாழைச்சேனை,முறாவோடை பாடசாலை மைதானத்திற்கு அமைக்கப்பட்ட சுற்றுமதில்கள் முஸ்லிம் குழுக்களினால் இன்று உடைக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 க்கும் அதிகமானவர்கள் முச்சக்கர வண்டியில் வாள்கள் மற்றும் தடிகளுடன் வருகை தந்து பாடசாலை மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தி சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பாடசாலையில் மாலை நேர வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்,இதன் காரணமாக அப்பகுதியில் அச்ச நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸ் உயரதிகாரி மற்றும் இராணுவ உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் வேண்டுமென்று அப்பகுதியில் இனக்கலவரத்தை தூண்டுவதற்கான செயற்பாடுகளாக இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காணியின் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது இவ்வாறான அத்துமீறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? எனவும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்