வியாழன், ஒக்டோபர் 29, 2026
Breaking
Breaking

அம்பாறையை பதற வைத்த சம்பவம்! தமிழ் மாணவி எரிந்த நிலையில் சடலமாக

பகிர: Facebook WhatsApp X Telegram
அம்பாறையை பதற வைத்த சம்பவம்! தமிழ் மாணவி எரிந்த நிலையில் சடலமாக

குளித்த பின் தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..

பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி திடிரென எரிந்த நிலையில் சடலமாக தரையில் வீழ்ந்த நிலையில் அலறியுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கதிர்காமத்தம்பி வீதியை சேர்ந்த நடேஸ்வரராஜன் அக்ஸயா (வயது-17) என்பவர் ஆவார்.

சம்பவம் இடம்பெற்ற வேளை தாய் தந்தை எவரும் வீட்டில் இருக்கவில்லை. மாணவியின் சகோதரர் மாத்திரமே இந்த சம்பவத்தை முதலில் அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரவியிருந்த தீயினை அயலவர்களின் உதவியுடன் அணைத்ததாக அங்கு சென்ற ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவி காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் கா.பொ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மின்னொழுக்கினால் எவ்வாறு தீ பரவியதா, கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்