புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

இ.போ.ச.பேருந்தில் தமிழ்- முஸ்லிம்களிற்கு ஏன் இந்த அவலநிலை…! வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள்

பகிர: Facebook WhatsApp X Telegram
இ.போ.ச.பேருந்தில் தமிழ்- முஸ்லிம்களிற்கு ஏன் இந்த அவலநிலை…! வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள்

மத்துகம டிப்போவுக்கு சொந்தமான இ.போ.ச பேருந்தில் சிங்கள மொழியில் இனத்து வேசமாக எழுதப்பட்டிருக்கும் வசனம் தொடா்பில் சமூக வலைத்தளங்களில் விமா்சனங்கள் எழுந்துள்ளது.

சிங்களவர்களிடம் புலியும் தோல்வியடைந்த நாட்டில் ஒட்டகம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என தெரிந்துகொள்ள வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது.

மதுகம டிப்போவுக்கு சொந்தமான (இல-9532) எனும் பஸ்ஸில் குறித்த வசனம் எழுதப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் சிங்கங்களிடம் தோற்று போயினர் அதாவது தமிழர்கள் தோற்று போனார்கள், இதனால், ஒட்டகங்கள் அதாவது முஸ்லிம் மக்கள் அமைதியாக இருக்க தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற பொருளில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இதேவேளை பௌத்த பிக்குமாரை தனது எழுத்துக்களால் விமரிசித்தாரென தெரிவித்து 100 நாட்களுக்கு மேல் எழுத்தாளரான ஷக்திக சிறைவைக்கப்பட்டிருந்ததை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி அவர்களுக்கு எதிராகவே பொதுவௌியில் வெறுப்புணர்வு பேச்சுகளில் ஈடுபடுபவர்கள் கண்களுக்கு இது புலப்படவில்லையா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் தமிழ் , முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுதொடர்பில் ஏன் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் சிறுபான்மையின மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்