வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கற்பழித்த வாலிபர்.!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதனையறிந்த 22 வயது வாலிபர் வாம்ஷி அவரது வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அதனை தடுக்க முயன்ற மூதாட்டியை கோடாரி போன்ற ஆயுதத்தால் தலையில் பலமாக தாக்கி விட்டி தப்பினார். வீட்டிற்கு வந்த மூதாட்டியின் பேரன் படுகாயமடைந்த தனது பாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மூதாட்டியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி பதிவை சோதனை செய்து பார்த்ததில், வாம்ஷி தான் குற்றவாளி என்பது தெரிய வந்தது.
வாம்ஷி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர். இதற்கு முன்னர் வாம்ஷி இது போன்ற பல குற்றங்கள் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like