புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

மகனை காப்பாற்ற அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற தந்தை – மாட்டிக்கொண்ட சோகம்

பகிர: Facebook WhatsApp X Telegram
மகனை காப்பாற்ற அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற தந்தை – மாட்டிக்கொண்ட சோகம்

மகனை காப்பாற்றுவதற்கு பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட தந்தை ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் அகுரஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அகுரஸ்ஸ பிரதேசத்தில் காதலித்த பெண்ணை உல்லாச விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று ஆபாச படங்களை எடுத்து, அதன் பின்னர் அதனை காட்டி தனக்கு பணம் கொடுக்குமாறு குறித்த பெண்ணை நபர் ஒருவர் வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தனது அக்காவின் கிரடிட் அட்டையை குறித்த நபரிடம் அப்பெண் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிலிருந்து பல தடவைகள் சந்தேக நபர் பணம் எடுத்துள்ளார்.

அதன் பின்னர் பெண்ணின் அக்கா கிரடிட் அட்டையை பயன்படுத்திய பொழுது பணம் எடுக்கப்பட்டிருந்தமை தெரியவந்ததை அடுத்து அவர் வங்கியில் முறையிட்டதுடன் அகுரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.

இந்நிலையில் வங்கியின் சி.சி.டி.வி உதவியுடன் சந்தேகநபரைபொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது குறித்த சந்தேகநபரின் தந்தை தனது மகனை, குற்றங்களில் இருந்து விடுவிக்குமாறு அகுரஸ்ஸ குற்றத்தடுப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 5 அரை இலட்சம் ரூபாய் பணம் கொடுத்த போது, அந்த அதிகாரியினால் மாத்தறை குற்றத்துடுப்பு பிரிவிற்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் அவரை கைது செய்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்