செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பம்

பகிர: Facebook WhatsApp X Telegram
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பம்

புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மேலும் தெரிவித்த அவர், ‘இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்