புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

யாழ்ப்பாணம் மருதனார்மட விடுதியில் கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் விடுவிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ்ப்பாணம் மருதனார்மட விடுதியில் கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் விடுவிப்பு

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று அதிகாலை ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

“இராணுவத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இராணுவ அலுவலகரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா? பிடியாணை உள்ளனவா? என்பது பெரும் குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரப்பட்டது. அவ்வாறான ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் 41 பேரும் விடுவிக்கப்பட்டனர்” என்றும் பொலிஸார் கூறினர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்