ஒரு வயது குழந்தையை துடிக்கதுடிக்க கொலை செய்த தாய்… பின்பு கதவை பூட்டிக்கொண்டு செய்த காரியம்

திருப்பூரில் ஒரு வயது ஆண் குழந்தையைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இளம் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பெரிய பாளையம் பகுதியில் வசித்து வரும் பிரபாகரன் (31). இவரது மனைவி துர்கா(28). குறித்த தம்பதிக்கு ஒரு வயதில் ரித்திக் என்ற மகன் இருந்துள்ளார்.

பிரபாகரன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் துர்கா குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இருந்துள்ளார். பிரபாகரனுக்கும் துர்காவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. வழக்கம் போல் சம்பவத்தன்றும் சண்டை ஏற்பட மனமுடைந்த துர்கா பிரபாகரன் வேலைக்குச் சென்ற நேரம் பார்த்து, தனது மகனைக் கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாலை 5 மணி வரையிலும் வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் கதவைத் தட்டியுள்ளார். ஆனால், துர்கா திறக்காததால் வீட்டின் மேலிருந்த ஓடு ஒன்றைத் தூக்கிவிட்டு வீட்டினுள் பார்த்துள்ளார். அப்போது, துர்கா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனே அங்குச் சென்ற பொலிசார், குழந்தையின் கழுத்தில் கைத்தடம் இருப்பதால் துர்கா தான் அவரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இரண்டு பேரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.