செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

முன்னாள் இராஜாங்க – பிரதி அமைச்சர்கள் மற்றும் நா. உறுப்பினர்களுக்கு இடியாக வந்த செய்தி

பகிர: Facebook WhatsApp X Telegram
முன்னாள் இராஜாங்க – பிரதி அமைச்சர்கள் மற்றும் நா. உறுப்பினர்களுக்கு இடியாக வந்த செய்தி

முன்னாள் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை கையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் கையளிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எட்டாவது நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்பாக அனைத்து இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை உரிய காலத்திற்குள் ஒப்படைக்கப்படாத பட்சத்தில், எதிர்கால நடவடிக்கைகளுக்கு பாதிப்பு எற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்க காலத்தில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், இதுவரை உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை ஒப்படைக்கவில்லை என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

வழமையாக இந்த நடைமுறை இல்லாத நிலையில் இம்முறை மட்டும் சட்டப்படி விடயங்கள் நடை பெறுகின்றமை குறிப்பிடத் தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்