செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

கொரோனாவால் தமிழர் பகுதியில் பேராபத்து! மக்கள் போராட்டம் வெடித்தது

பகிர: Facebook WhatsApp X Telegram
கொரோனாவால் தமிழர் பகுதியில் பேராபத்து! மக்கள் போராட்டம் வெடித்தது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை புணாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து அப் பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனஈர்ப்புபோராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதன்போது வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்திற்கு மாணவர்கள், வித்தியாலய நுழைவாயிலை மூடியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம் , கொண்டு வராதே கொண்டு வராதே கொரோனாவை எங்கள் பிரதேசத்திற்கு கொண்டு வராதே , இனரீதியாக அழிக்கும் முயற்சியை நிறுத்து – சிறுபான்மை மக்களை இலக்கு வைக்காதே , எமது மாகாணத்தை அழிக்க நேசிக்கும் சதியை நிறுத்து – மக்களை காப்பாற்று´ என்பன போன்ற வாசகங்களை ஏந்தியாவாறு அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

YouTube video

அத்தோடு ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலயத்தில் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காமை காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக தடைப்பட்டு காணப்பட்டது.

அத்துடன், ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயம் மற்றும் ஜெயந்தியாய அஹமட் கிறாஸ் வித்தியாலய பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் மாத்திரமே சமூகமளித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

தென் கொரியாவிலுள்ள இலங்கையர்களில் முதற்கட்டமாக ஒரு குழுவினர் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்தில் சிகிச்சை அளிக்கவுள்ளது.

அந்தவகையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்களால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்