செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

பல்கலைக்கழகத்தில் கொடூரமான பகிடிவதை – உயிருக்கு போராடும் மாணவன்

பகிர: Facebook WhatsApp X Telegram
பல்கலைக்கழகத்தில் கொடூரமான பகிடிவதை – உயிருக்கு போராடும் மாணவன்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதல் வருடத்தில் கற்கும் மாணவன் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக அவர் விபத்துக்குள்ளாகி உள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் சிலர் தனது சகோதரன் மீது கனரக வாகனத்தின் டயரை உருட்டியமையினால் அது தலையில் விழுந்தமையினால் அவர் உயிருக்கு போராடுவதாக பாதிக்கப்பட்ட மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பசிந்து என்ற மாணவன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கடந்த வருடம் இணைந்துள்ளார்.

சகோதரிகளை கொண்ட வீட்டில் கடைசி மகனாக பிறந்த பசிந்து, உயர்தரம் பரீட்சை எழுதும் போது தந்தை உயிரிழந்துள்ளார். தந்தை விவசாயம் செய்தே வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்த நிலைமையின் மத்தியிலேயே அவர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்