திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையில் கொரோனா நோயாளிகளில் இருவர் கவலைக்கிடம் ! சுகாதார பிரிவு தகவல்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் இடம்பெற்ற துயரம் – வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளிய யுவதிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றிரவு மேலும் 2 கொரோனா நோயாளர்களின் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட இரண்டு நோயாளர்களின் நிலைமை தீவிரமாக உள்ளதாகவும், குறித்த இருவரும் நிமோனியா நிலைமைக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 218 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காண்காணிப்பில் உள்ளனர்.

அத்துடன் சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகளுடன் அதிகமானோர் அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 88 என சுகாதார பிரிவு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்