வியாழன், நவம்பர் 5, 2026
Breaking
Srilanka

கல்வித்துறை ஊழியர்களுக்கு விசேட அடையாள அட்டை

பகிர: Facebook WhatsApp X Telegram
பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்த அறிவிப்பு

கல்வி கட்டமைப்பில் சேவையாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தேசிய மட்டத்திலான தொழில் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும ஏற்கனவே, கல்வியமைச்சின் செயலாளருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த அடையாள அட்டைகள், இலங்கையின் கல்வித்துறையில் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள், ஆசிரியர் பயிற்சியாளர்கள், ஆசிரியர் ஆலோசக அதிகாரிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

நவீன தொழிநுட்பத்துடன் வடிவமைக்கப்படும் இந்த அடையாள அட்டைகளின் மூலம் கல்வித்துறையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு விசேடமான பல நிவாரன சேவைகள் கிடைக்கும் என கல்வியமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்