புதன், நவம்பர் 4, 2026
Breaking
Breaking

யாழ் நகரப் பகுதியில் முடக்கம்? முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழ் நகரப் பகுதியில் முடக்கம்? முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

வெளிமாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இந்த நிமிடத்திலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண நகரப் பகுதியில் நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த பகுதியை முடக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருடன் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் மாநகர பகுதியில் தொற்று ஏற்படாத வண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக ஆராயும்படி ஆளுநர் பணித்தமைக்கு அமைய குறித்த நடைமுறை இன்றிலிருந்து பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்