யாழில் கணவனை பிரிந்த பெண்ணுடன் உல்லாசமாக ஊர் சுற்றும் ஆர்யா!

நடிகர் ஆர்யா தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அலப்பறை செய்து வருகிறார். அவரை பார்ப்பதற்கு வயது வேறுபாடின்றி யாழ்ப்பாண ரசிகர்கள் பலர் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இதேவேளை, ஆர்யாவுடன் கனடாவில் வாழும் இலங்கை பெண் ஒருவரும் வந்துள்ளார். ஆர்யா பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இப்பெண்ணின் பெயர் சுசானா. விவாகரத்தான இவர், ஆர்யாவை திருமணம் செய்ய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அண்மையில் யாழ் நூலகத்தில் விதிமுறையை மீறி ஆர்யா குழுவினர் படப்பிடிப்பு நடத்தியபோது, பெருமளவு இளைஞர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர்.

இன்று ஆர்யா தீவுப்பகுதிக்கு செல்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், அங்குள்ள வயோதிகர்கள் சிலர் காலையிலிருந்தே மாலையும் கையுமாக நின்ற வேடிக்கையான சம்பவமும் நடந்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like