திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

கொரோனா தீவிரம்; 400 கடைகளுக்கு பூட்டு

பகிர: Facebook WhatsApp X Telegram
கொரோனா தீவிரம்; 400 கடைகளுக்கு பூட்டு

கொரோனா தொற்று உறுதியாகியுள்ள விற்பனை முகவர் ஒருவரின் கவனயீன செயற்பாட்டினால் 400ற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட சம்பவம் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

கம்பளை, பேராதனை, கெலிஓயா, கொஸ்ஸின்ன மற்றும் வெலிகொல்ல ஆகிய நகரங்களிலேயே மேற்படி 400 கடைகள் இவ்வாறு மூடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மூடப்பட்டிருக்கும் கடைகளில் 120 கடைகள் கம்பளை நகரிலுள்ளவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பளையில் இதுவரை 130 கொரோனா தொற்றாளர்களும், உடபலாத்த பகுதியில் 77 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram