திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Jaffna

யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தொடர்பில் வெளியான தகவல்!

பகிர: Facebook WhatsApp X Telegram
கொரோனா நோயுடன் பாடசாலை சென்ற மாணவி – தாய் உட்பட இரு பிள்ளைகளுக்கு தொற்று

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மந்திகை வைத்தியசாலையில் 7 ஆம் இலக்க விடுதியில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில்  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர் பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்தவர் என்பதுடன் கடந்த மூன்று நாள்களுக்கு முன் மருதனார்மடத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகத்துக்கு சென்றிருந்ததாகவும் அங்கு குடிதண்ணீர் குடித்ததாகவும் சுகாதாரத் துறையினருக்கு தெரிவித்துள்ளார்.

அவரது குடும்ப உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram