திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

இரவில் பிரபல நடிகையின் வீட்டு வாசலில் ஏறிகுதித்த வாலிபர்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

பகிர: Facebook WhatsApp X Telegram
இரவில் பிரபல நடிகையின் வீட்டு வாசலில் ஏறிகுதித்த வாலிபர்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் தெய்வ திருமகள், முகமூடி, சத்யம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் மகளான நடிகை அஹானா. மலையாளத்தில் லூக்கா, 18 ஆம் படி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களின் வீடு திருவனந்தபுரம் சாஸ்தாமங்கலத்தில் உள்ளது. இதனிடையே நேற்று இரவு இவரது வீட்டிற்குள் வாலிபர் ஒருவர் நுழைய முயன்றார்.

அவர் சுவர் ஏறிகுதித்து காம்பவுண்ட்டுக்குள் நுழைந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த கிருஷ்ணகுமார் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து, அவர் உடனே இது பற்றி வட்டிகாவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரை கைது செய்தனர்.

மேலும், விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் பெயர் பசில் அல்அக்பர் என்றும் நடிகை அஹனாவின் தீவிர ரசிகரான அந்த நபர் அஹனா மீதான ஒரு தலை காதலால்…,

அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் கஞ்சா போதையில் வீட்டிற்குள் ஏறி குதித்து நுழைந்திருப்பதும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram