திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
முக்கிய செய்திகள்

வாட்ஸ் ஆப் செயலிக்கு பதிலாக சிக்னல் மெசேஞ்சர் மாறும் பயனாளர்கள்; அப்படி இதில் என்ன சிறப்பு தெரியுமா?

பகிர: Facebook WhatsApp X Telegram
வாட்ஸ் ஆப் செயலிக்கு பதிலாக சிக்னல் மெசேஞ்சர் மாறும் பயனாளர்கள்; அப்படி இதில் என்ன சிறப்பு தெரியுமா?

உலகில் அதிகளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி என்றால் அது வாட்ஸ்அப் செயலிதான். கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, சமீபத்தில் பிப்ரவரி மாதத்திற்குள் வாட்ஸ்அப் தனது பயனர்களின் சுய விவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பதிவிடுமாறு வற்புறுத்தி வருகிறது.

வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2014-இல் வாங்கி இருந்தது. எண்டு டூ எண்டு என்க்ரிப்ஷன் மூலமாக 2016-இல் வாட்ஸ் அப் பிரபலமானது.

இதனை ஓபன் விஸ்பர் சிஸ்டமுடன் இணைந்து சிக்னல் என்க்ரிப்டட் மெசேஜிங் புரோட்டோக்கால் மூலமாக கொண்டுவந்திருந்து வாட்ஸ் அப்.

இந்த நிலையில், தான் சிக்னல் மெசேஜிங் அப்ளிகேஷன் அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப்பை விடவும் சிக்னல் செயலியில் அதிகளவிலான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், வாட்ஸ் அப்பை போலவே வீடியோ, ஆடியோ, போட்டோ, மற்றும் குரூப் மெசேஜிங் வசதி இதிலும் உள்ளது. பாதுகாப்பு அம்சங்களும் இதில் அதிகம் என்பதால் வாட்ஸ் அப் பயனர்கள் சிக்னல் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

அதனால் பெரும்பாலானோர் சிக்னல் செயலிக்கு மாறி வருவதாகவும் தெரிகிறது. உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலோன் மஸ்கும் சிக்னல் செயலியை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram