திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

காணாமல் போன இளம்பெண்.. சுவற்றில் ஓட்டி பூசிய காதலன்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி சம்பவம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
காணாமல் போன இளம்பெண்.. சுவற்றில் ஓட்டி பூசிய காதலன்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி சம்பவம்!

மகாராஷ்ரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வாங்கோன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவரின் வீட்டின் சுவற்றில் இருந்து கொலை செய்யப்பட்ட அவரின் காதலியின் எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து, விசாரணையில் 32 வயதான பெண்னை 5 வருடங்களாக காதலித்து வந்த அந்த 30 வயதான நபர், அவருடன் லிவ்விங் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்த நபருடன் ஒன்றாக வாழ்ந்த அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் அவர் எங்கிருக்கிறார் என அப்பெண்ணின் பெற்றோர் விசாரித்திருக்கின்றனர்.

அதற்கு குஜராத்தில் உள்ள வபி எனும் பகுதிக்கு அப்பெண் சென்றிருப்பதாக அவளின் பெற்றோரிடம் சொல்லி சமாளித்திருக்கிறார்.

இருப்பினும் தங்களின் மகளை வெகுநாட்களாக காணாததால் இது தொடர்பாக காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர்.

கடைசியாக தங்களின் மகளை கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி தான் பார்த்ததாகவும் காவல்துறையினரிடம் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, பொலிசார் அந்த நபரிடம் தகுந்த முறையில் விசாரித்த போது தான் அவரை கொலை செய்து சுவற்றில் வைத்து பூசிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனால் காவல்துறையினரும், பெண்ணின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். வாங்கோன் கிராமத்தில் அந்த நபர் வசித்து வந்த வீட்டின் சுவற்றில் இருந்து அவனின் காதலியின் எலும்புக்கூட்டினை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவரை கொலை செய்ததாக அந்த நபர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அந்த நபர் மீது கொலை, கொலையை மறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram