திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

பள்ளி தோழிகளின் கோவா பயணம்; ஒரே நேரத்தில் 11 பேர் பலி.. நெஞ்சை உருக்கும் கடைசி செல்ஃபி புகைப்படம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
பள்ளி தோழிகளின் கோவா பயணம்; ஒரே நேரத்தில் 11 பேர் பலி.. நெஞ்சை உருக்கும் கடைசி செல்ஃபி புகைப்படம்!

கர்நாடக மாநிலம் தார்வார் புறநகர் இட்டிகட்டி அருகே தட்சின கொப்பா கிராசில் பெலகாவி-தார்வார் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 11 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தார்வார் புறநகர் போலீசாரும், அந்தப் பகுதி பொதுமக்களும் விரைந்து சென்று, வேனின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

மீதமுள்ள 5 பேருக்கு கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பலியானவர்களில் 9 பெண்களும், 2 ஆண்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவாவுக்கு சுற்றுலா சென்ற ஒரே பள்ளியின் மாணவிகள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் பலியான முன்னாள் மாணவிகள் அனைவருக்கும் திருமணமாகி கணவர், பிள்ளைகள் உள்ளனர். இதனால் அவர்களின் கணவர்கள், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் உள்ளனர்.

அவர்கள் உப்பள்ளிக்கு வந்து, பலியானவர்களின் உடல்களை பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதது, நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

பள்ளித் தோழிகளான இவர்கள், தங்களது சுற்றுலாவை தொடங்கும் முன்பு, தேவநாகரியில் டெம்போவில் இருந்தபடி ஒரு செல்பியை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

பள்ளித் தோழிகளுடன் கோவா செல்கிறோம் என்று அதில் பதிவிட்டுள்ளனர். இந்த செல்பி போட்டு சில மணி நேரத்தில் அவர்கள் விபத்தில் சிக்கியது குடும்ப உறுப்பினர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram