செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Cinema

ஹீரோவாகும் நடிகர் விஜய்யின் மகன்! காட்டுத் தீயாய் பரவும் தகவல்… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
விஜய்யின் உதவியுடன் மகன் சினிமாவில் அறிமுகம்

இயக்குனராக படித்து வரும் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறாராம்.

அதுவும் தெலுங்கில் சமீபத்தில் அறிமுக நடிகர், நடிகையின் நடிப்பில் வெளியான உப்பண்ணா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

மேலும், நடிகர் விஜயின் மகன் சஞ்சய் எப்போது சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர் மனதில் நீண்ட நாட்களாக இருந்த நிலையில் இந்த தகவல் அவர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram