திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Jaffna

பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயது மாணவிக்கு கொரோனா

பகிர: Facebook WhatsApp X Telegram
பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயது மாணவிக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உட்பட மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அத்தோடு மன்னாரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த பெண் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுயதனிமைப் படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram