சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Jaffna

யாழ். பல்கலைக்கழக மாணவிக்கு கோவிட் தொற்று

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி!

யாழ். பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவி ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பம்பைமடுவில் உள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் கண்டியில் உள்ள தமது வீட்டிற்கு சென்று வந்திருந்த நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் மாணவி ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும், குறித்த மாணவியை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram