செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Cinema

கட்சிக்காக கோடிகளை செலவு செய்த கமலின் பணம் இதுதானா? பிக்பாஸ் 5 புதிய அப்டேட்

பகிர: Facebook WhatsApp X Telegram
ஈழத்து தர்ஷனின் இடத்தை பிடிக்க போகும் பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா? உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள்

விஜய் டிவியில் வருட வருடம் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும். இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளன.

ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.. இந்த நிலையில், ஏற்கனவே சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கமலஹாசன் கட்சியின் பணிகள் அதிகம் இருப்பதாலும், பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு கொண்டிருந்ததாலும், பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்குவது சந்தேகமே என செய்திகள் வெளியாகின.

மேலும், அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என கடந்த சீசனிலுமே பேசப்பட்டு வந்தது. ஆனால், இது சம்பந்தமான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

மேலும், கொரோனா ஊரடங்கில் பிக்பாஸே நடத்த முடியுமா? என்ற சூழ்நிலையில் பிக்பாஸ் வேற அவசியம் தானா என கேள்விகள் எழுந்து வருகின்றன.

அதுமட்டுமின்றி சட்டசபை தேர்தலில் தோல்வியுற்ற கமல் பல கோடிகளை செலவிட்டதாலும், அதை ஈடுக்கட்ட பிக்பாஸ் மட்டும் தான் சிறந்த வழி என்பதும் அவரே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது வெளிவான தகவலின்படி கமல்ஹாசன்தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளதாகவும், இதற்கான அட்வான்ஸ் பணத்தை அவர் கடந்த மார்ச் மாதமே பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இதுசம்பந்தமான அதிகாரப்பூர்வ தகவல் வருமா? என்பதும் பிக்பாஸ் முதலில் நடக்குமா? என்பதும் இனி வரும் நாட்களில் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்…..

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram