செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Cinema

என்னோட வாழ்க்கையை முடிச்சுக்கிறேன்.. வி.ஜே ரம்யாவின் லைவ் சாட்டில் கதறிய ரசிகை

பகிர: Facebook WhatsApp X Telegram

விஜய் டிவி தொகுப்பாளரான விஜே. ரம்யா தமிழ் சினிமாவிலும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். எப்பொழுதும், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா இன்ஸ்டாகிராமில் லைவ் செய்துள்ளார்.

அப்போது ரம்யா இன்னைக்கு நாள் எப்படி போச்சுனு சொல்லுங்க என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, பலரும் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ரசிகர்கள் தாங்கள் எதிர்கொண்டு வரும் இக்கட்டான சூழலையும், வீட்டில் நடந்த லூட்டிகளையும் ரம்யாவுடன் பகிர்ந்துக் கொள்ள ஜாலியான சென்று கொண்டிருந்தtது.

அப்போது லைவ்வில், அதிரடி திருப்பமாக, ரசிகை ஒருவரின் பதில் ரம்யாவை கொந்தளிக்க செய்துள்ளது. அந்த ரசிகை, எனது கணவர் தினமும் என்னை அடிக்கிறாரு. அதனால், என்னோட கல்யாண வாழ்க்கையை முடிச்சிக்கிறேன். எல்லா பெண்களும் உங்களுக்காக நீங்கள் தான் போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ந்துபோன ரம்யாவும் பதிலுக்கு, நீங்க பாதுகாப்பான இடத்துல, உங்க குடும்ப நபர்களுடன் இருப்பீங்கனு நம்புறேன். இந்த மாதிரி பெண்களுக்கு எதிரான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்குதல்கள் பல நடந்து வருது. உங்களுக்காகவே நான் ரொம்ப வருத்தப்படுறேன் என பதிலளித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற பிசிக்கல் மற்றும் மென்டல் அப்யூஸ்கள் இருந்தால், மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறிய அவர், தங்களுக்கு நம்பகமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

Gallery

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram