பரபரப்பாக நடக்கும் பிக்பாஸ் சீசன் 5 பணிகள்…. 8 போட்டியாளர்கள் குறித்து கசிந்த தகவல்..!

உலகநாயகன் கமலின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை துவங்குவதற்கான ஆயத்த பணிகள் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக 8 போட்டியாளர்களின் பெயர் தற்போது சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

வாய் சண்டையில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் சிலர் போட்டியாளர்களாக களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் வனிதா விஜயக்குமாருடன் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதி பரபரப்பை கிளப்பியவர் ரம்யா கிருஷ்ணன்.

இதே போல் வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை மிகக் கடுமையாக விமர்சித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

டிக் டாக்கில் மோதலில் பிரபலமானவர் ஜி.பி.முத்து. அதனால் இவர்கள் போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.

குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், ஷகீலாவின் மகள் மீலா, நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

எது எப்படி இருந்தாலும் இறுதி போட்டியாளர்கள் பட்டியல் மற்றும் போட்டி துவங்கும் உறுதியான நாள் வெளியாகும் போது அது மிகப் பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.