புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
முக்கிய செய்திகள்

கனடாவில் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துவரச் சென்ற கேரளப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

பகிர: Facebook WhatsApp X Telegram
கனடாவில் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துவரச் சென்ற கேரளப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

கனடாவில், பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்ற கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள தெற்கு சர்ரேயில் சாலை விபத்தொன்றில் சிக்கிய Shilpa Babu (44) என்னும் அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Shilpa கோட்டயத்தைச் சேர்ந்த Babu என்பவரின் மகள் ஆவார்.

கனடாவில் செவிலியராகப் பணியாற்றி வந்த Shilpa, தனது பிள்ளைகளை இசைப்பள்ளியிலிருந்து அழைத்துவரச் செல்லும்போது, அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது.

Shilpaவின் கணவர் Dr Anil Chacko என்பவர் ஆவார். தம்பதியருக்கு Noha மற்றும் Neev என்னும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். Shilpaவின் மரணம் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram