ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
முக்கிய செய்திகள்

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்.. மண்டபத்திற்கு வந்த காதலனின் வெறிச்செயல்!

பகிர: Facebook WhatsApp X Telegram
முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் ஓட்டமெடுத்த மணப்பெண்ணால் பரபரப்பு

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் தனது காதலியை திருமண மண்டபத்தில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முபாரிக்பூர் கிராமத்தில் காஜல் என்ற பெண்ணிற்கு திருமணம் நடைபெற இருந்தது. அப்போது இளைஞர் ஒருவர், கையில் துப்பாக்கியுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு திருமண வரவேற்பு முடிந்த நிலையில், மணமகள் அறைக்கு சென்ற குறித்த இளைஞர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் காஜலை சரமாரியாக சுட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

மதுரா பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர் காஜலை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்ததை அறிந்து குறித்த இளைஞர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த உடனேயே, காஜலின் தந்தை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram