ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் பலி

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் நிபோஜன் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று(30) கொழும்பு தெகிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் மரணமடைந்துள்ளார்.

உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த எஸ்.என். நிபோஜன், பல அச்சுறுத்தல்கள் மத்தியிலும் கிளிநொச்சியில் இருந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்கள். காணி விடுவிப்பு போராட்டங்கள் , மீள் குடியேறுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர்.

சிறந்த புகைப்பட கலைஞனாக புகைப்பட ஊடகவியலாளனாக பல கதை சொல்லும் புகைப்படங்களை செய்தி அறிக்கைகள் ஊடாக வெளிக்கொணர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.