மூன்று ராசியினரை தேடிவரும் எதிர்பாராத ராஜயோகம்..! இன்றைய ராசி பலன்கள்

மங்கலகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 8 ம் நாள் திங்கட்கிழமை ( 2022 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி).

ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடுகின்றது.

இந்த நிலையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் கூடிவரும். பெண்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். சிலர் திடீர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். சிலர் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு செல்வார்கள். யாரையும் நம்பி கடன் கொடுக்கக் கூடாது. பணியிடத்தில் உங்கள் திறமையால் பாராட்டுகளை பெறுவீர்கள். பழைய பிரச்சினைகள் அனைத்தும் சமூகமாக முடியும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் எந்த ஒரு காரியத்திலும் கவனமாக செயல்பட வேண்டும். எடுக்கின்ற முயற்சிகளில் இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். பொருளாதார வரவுகளில் தடை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். சிலர் வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். தொழில், வியாபாரங்களில் இருந்த எதிரிகள் விலகுவார்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் வராத கடன் தொகை வட்டியுடன் வந்து சேரும். செல்வ நிலை உயரும். வீட்டில் பெரியவர்களின் ஆதரவு இருக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலர் புதிய ஆபரணம், வீடு வாங்கும் யோகம் பெறுவார்கள். ஆன்மீக தலங்களுக்கு செல்வீர்கள்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சுமுகமாக தீரும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். சிலருக்கு சுப காரிய விரயங்கள் ஏற்படும்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் மனக்குழப்பங்கள் தீரும். தாராள பொருள் வரவு இருக்கும். நண்பர்களால் ஆதாயங்கள் ஏற்படும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பிறருடன் விவாதங்களில் ஈடுபடக்கூடாது. பணம் தொடர்பான விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வாகனங்களை கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். உறவினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பெண்கள் வழியில் சிலருக்கு பொருள் வரவு இருக்கும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க பெறுவார்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத லாபம் இருக்கும். பொதுவெளியில் உங்களின் செல்வாக்கு உயரும். சிலர் குடும்பத்துடன் வெளியே சென்று வருவார்கள். எதிர்காலத்திற்கான திட்டமிடல்களை செய்வீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவு இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் மனம் உற்சாகமாக இருக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.பழைய பிரச்சினைகள் சமூகமாக தீரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பழைய கடன்களை வட்டியுடன் கட்டி முடிப்பீர்கள்.